கோவை: எரிசாராயம் பறிமுதல் - ஓட்டுநர்கள் கைது !

எரிசாராயம் கடத்தலில் உதவியாக இருந்த இரண்டு ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-03-27 02:21 GMT
அமலாக்கப் பிரிவு புலனாய்வுத் துறையினர் தமிழகம் முழுவதும் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். போலி மதுபான உற்பத்தி கூடங்கள், எரிசாராயக் கடத்தல்கள், பிற மாநில மதுபானக் கடத்தல்களைத் தடுக்க தொடர் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கோவை சூலூரில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,145 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 7,525 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலில் ஈடுபட்ட இரண்டு ஓட்டுநர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த எரிசாராயம் கர்நாடக மாநிலம் தார்வாடிலிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது கள்ளச்சாராயத்தில் கலப்பதற்காக கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த கடத்தலின் முக்கிய மூளையாக செயல்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார், அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல இந்த மதுபான கடத்தலுக்கு உதவியாக இருந்த ஓட்டுநரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Similar News