
பொன்னமராவதி அருகே செம்மலைப்பட்டியைச் சேர்ந்த நிவேதா (21) என்பவர் பொன்னமராவதியிலிருந்து ஆலவயலுக்கு பைக்கில் சென்றார். அப்போது கொப்பனாபட்டி கிளை சாலையில் அவருக்கு எதிரே பைக்கில் வந்த சோமசுந்தரம் (48) என்பவர் மோதியதில் நிவேதாவிற்கு காயம் ஏற்பட்டு புதுகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நிவேதா அளித்த புகாரில் பொன்னமராவதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.