
நெல்லை மாவட்டத்தில் 75 லட்சம் மதிப்புள்ள அமெரிக்கா டாலரை கிரிப்டோ கரன்சியாக பெற்றுக்கொண்டு 75 லட்சம் ரூபாய் கலர் ஜெராக்ஸ் நோட்டுக்களை கொடுத்து மோசடி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த கிரிப்டோ கரன்சி வர்த்தகம் செய்து வரும் ஆண்டனி செல்வம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட முகமது ரியாஸ், அய்யாதுரை, இசக்கிமுத்து ஆகிய மூன்று பேரை இன்று 24 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்து பணத்தை மீட்டுள்ளனர்.