
புதுக்கடை அருகேயுள்ள கீழ்குளம் பகுதியில் இருந்து பாறைகளை உடைத்து கடத்துவதாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமைதான போலீசார் நேற்று அந்த பகுதியில் உள்ள கொடித்தாறா விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வேகமாக வந்த ஒரு டெம்போவை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் அனுமதி இன்றி அந்த டெம்போவில் கருங்கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அவற்றை டெம்போ உடன் அதை பறிமுதல் செய்தனர். கடத்திய கருங்கற்கள் மதிப்பு ரூ 5 ஆயிரத்து 500 என தெரிகிறது. இதை அடுத்து டெம்போ டிரைவர் தெருவுகடை என்ற பகுதியை சேர்ந்த ஜஸ்டின் கிறிஸ்டோபர் (46) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.