மாமனாரை தாக்கியதாக வாலிபர் கைது

அருமனை;

Update: 2025-03-27 06:05 GMT
மாமனாரை தாக்கியதாக வாலிபர் கைது
  • whatsapp icon
அருமனை அருகே சரக்கல் விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன்ராஜ் (54). இவருடைய மகள் அனுஷா மோள் (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விபின் (32) என்பவருக்கும் 2023 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது அனுஷா மோள் பெற்றோருடன் வசித்து வருகிறார்.       இந்த நிலையில் நேற்று விபின் மனைவியை பார்ப்பதற்காக ஜெயன் ராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஜெயன் ராஜ் இடம் தனது மனைவி அனுஷா எங்கே? என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.      ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த விபின் மாமனார் ஜெயன் ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில்  அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விபினை கைது செய்தனர்.

Similar News