குழந்தைகளுக்கு எதிரான பாலியல்  விழிப்புணர்வு பேரணி

கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்;

Update: 2025-03-27 06:17 GMT
குழந்தைகளுக்கு எதிரான பாலியல்  விழிப்புணர்வு பேரணி
  • whatsapp icon
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி, “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” மற்றும் “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான நடைபேரணியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு மற்றும்   உதவி ஆணையர்  (கலால்)  ஈஸ்வர நாதன் இணைந்து கொடியசைத்து  துவக்கி வைக்கப்பட்டது .      இப்பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி டெரிக் ஜங்ஷன் -ல் நிறைவு பெற்றது. இப்பேரணியை நடத்த  அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சனல் ஜான் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகும்  இணைந்து  ஏற்பாடு செய்யப்பட்டது.      பேரணியில் அப்பள்ளியை சார்ந்த சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் ECO Club, JRC மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். போதைப்பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளும் “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான பதாகைகளும் குழந்தைகள் ஏந்திச்சென்றனர்.      பேரணியில் ஆய தீர்வு பணியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள், குழந்தை உதவி மையப் பணியாளர்கள், காவல்துறையினர், சமூக நலத்துறை அலுவலர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News