வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

கலெக்டர் நடத்தினார்;

Update: 2025-03-27 06:30 GMT
வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு
  • whatsapp icon
கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பறக்கை, தெங்கம்புதூர் பகுதிகளில் வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்து        மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பறக்கை, தெங்கம்புதூர் பகுதிகளில் வாய்க்கால் ஓரங்களில் தென்னந்தோப்புகள் அமைக்கும் போது போதிய இடைவெளி விட்டு வாய்க்கால் வரப்புகளை ஆக்கிரமிக்கமால், நீர்ப்போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி தென்னை மரங்களை நட்டிட நீர்வள ஆதார அமைப்பு, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து திட்டமிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மேலும் தெங்கம்புதூர் பகுதியில் நெல் தரிசில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து வயல்கள் நேரில் பார்வையிடப்பட்டது. என கூறினார்.      தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் புத்தளம் பகுதியில் அமைந்துள்ள உப்பளத்தினை நேரில் பார்வையிட்டு, கடல் நீர் மற்றும் நன்னீரை, வரப்புகளில் தேங்கி  உப்பு விளைவிக்கும் செயல்முறைகள் குறித்து அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.      ஆய்வில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ஜென்கின் பிரபாகரன், வேளாண்மை உதவி இயக்குநர் (இராஜாக்கமங்கலம்) செல்வி பொன்ராணி, வேளாண்மை அலுவலர் குப்புசாமி, முன்னோடி விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News