சங்கரன்கோவில் வனத்துறையினர் யானையை ஆய்வு செய்தனர்

வனத்துறையினர் யானையை ஆய்வு செய்தனர்;

Update: 2025-03-27 11:29 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவில் கோமதி யானையை வனத்துறையினர் திடீரென்று ஆய்வு செய்தனர். இந்த கோவில் யானையை 31 வயதான கோமதியை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் யானையை புளியங்குடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் யானையின் எடை உயரம் பார்த்த பின்பு வழங்கப்படும் உணவு வகைகள் அதன் செயல்பாடுகள் குறித்து பாகனிடம் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது கோவில் நிர்வாகி மற்றும் கோயில் ஊழியர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News