மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா!
மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப்ரல் மாதம் 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது;
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப்ரல் மாதம் 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ பெருவிழாவை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார். தேரினை ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அறிக்கையினை சமர்பிக்கவும் தாசில்தார் ஆலோசனை வழங்கினார்.