ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பானங்குளம் பகுதியில் ஏர்கன் உடன் திரிந்த சென்னை இளைஞர் கைது. காவல்துறையினர் விசாரணை..*

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பானங்குளம் பகுதியில் ஏர்கன் உடன் திரிந்த சென்னை இளைஞர் கைது. காவல்துறையினர் விசாரணை..*;

Update: 2025-03-27 17:45 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பானங்குளம் பகுதியில் ஏர்கன் உடன் திரிந்த சென்னை இளைஞர் கைது. காவல்துறையினர் விசாரணை.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பானங்குளம் பகுதியில் பைக்கில் இரு இளைஞர்கள் சுற்றி வந்தனர். சந்தேகப்பட்ட கிராம மக்கள் அவர்களிடம் விசாரித்த போது, ஒருவர் தப்பி ஓடினார். மற்றொருவரை பிடித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் சென்னை மேடவாக்கம் ராஜேஷ்(34) என்பதும், அவருடன் வந்தது ராமநாதபுரத்தை ஆரோக்கியஜான் என்பதும் தெரியவந்தது. ராஜேஷ் இடமிருந்து ஏர் கன்னை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் விசாரணையில் ராஜேஷ் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் திருட்டு வழக்கில் கைதாகி சேலம் சிறையில் இருந்த போது ஆரோக்கிய ஜான் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருடும் நோக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு வந்துள்ளனர். ராஜேஷ் வைத்திருந்த ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய ஆரோக்கிய ஜானை தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News