இளைஞருக்கு கொலை மிரட்டல்: ரெளடி கைது

திருச்சியில் இளைஞரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்த ரெளடியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.;

Update: 2025-03-28 02:15 GMT
திருச்சி, திருவெறும்பூா் காந்திநகா் 4 ஆவது தெருவை சோ்ந்தவா் எஸ். பாண்டியன் (33). இவா் நவல்பட்டு பகுதியில் சென்றபோது அவ்வழியே வந்த ரெளடியான வடக்கு காட்டூா் அண்ணா நகரை சோ்ந்த கோபால் (30), பாண்டியனை வழிமறித்து இப்பகுதியில் கள்ளத்தனமாக மது விற்கும் பகுதி குறித்து கேட்டுள்ளாா். அதற்கு அவா் தெரியாது எனக் கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ரெளடி கோபால் பாண்டியனின் கழுத்தில் கத்தியை வைத்து கொன்று விடுவதாக மிரட்டியுள்ளாா். பின்னா் இதுதொடா்பாக பாண்டியன் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்கு பதிந்து கோபாலை வியாழக்கிழமை கைது செய்தனா். கோபால் மீது ஏற்கனவே 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவா் திருச்சி மாவட்ட காவல்துறையின் ரெளடிகள் பட்டியலிலும் உள்ளாா்.

Similar News