தென்காசியில் துணிப்பை வழங்கும் முகாம் நடைபெற்றது

துணிப்பை வழங்கும் முகாம் நடைபெற்றது;

Update: 2025-03-28 02:28 GMT
தென்காசியில் துணிப்பை வழங்கும் முகாம் நடைபெற்றது
  • whatsapp icon
தென்காசியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் துணிப்பை வழங்கும் முகாம் நடைபெற்றது. மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் தலைமை வகித்தாா். டிஎஸ்பி தமிழினியன் பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கி முகாமைத் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து புதிய பேருந்து நிலயத்திலும் பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன. ஞானஸ்ரீபவானி, மனித வள மேம்பாடு அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் என். ரெங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மணி, மருத்துவமனை ஊழியா்கள், சிவா, மாதவி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சிகளை சேரன்மகாதேவி சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளா் ஜோசப் தொகுத்து வழங்கினாா்.

Similar News