சங்கரன்கோவிலில் அடிப்படை வசதிகள் செய்த தரப் பொதுமக்கள் கோரிக்கை

அடிப்படை வசதிகள் செய்த தரப் பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2025-03-28 02:46 GMT
சங்கரன்கோவிலில்  அடிப்படை வசதிகள் செய்த தரப் பொதுமக்கள் கோரிக்கை
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் தெற்குசங்கரன்கோவில் பாரதிநகரில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாரதி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இதில், 88 வீடுகள் வசித்து வரும் பகுதியில் மட்டும் வாருகால், சிமென்ட் சாலை ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், 12 வீடுகள் உள்ள ஒரு பகுதியில் மட்டும் மேற்கண்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடா்பாக அப்பகுதி மக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியா்,வட்டாட்சியா், சங்கரன்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை திரண்டு வந்து, தங்கள் பகுதிக்கும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனா்.

Similar News