
இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி சாந்துவார்பட்டி சுமார் 30 வருடகளாக இந்து ஆதி திராவிடா வகுப்பை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர் இங்கு சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகிறது. அவர்கள் ஒரு குடும்பத்தில் மூன்று குடும்பங்கள் இணைந்து கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர் . இந்தனால் அவர்களுக்கு போதிய இட வசதி இல்லாததால் பல முறை அரசிடம் மனுக்கள் கஷ்டத்தை தெரிவித்னர் . இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதி திராவிடா அமைசர் மூலமும் இந்த புகார் மனுவை கொடுதுள்ளனர் . சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர் . தற்பொழுது அரசு வழங்கிய 30,000 மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கட்டுவதற்கு கூட இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்கள் . புல எண் 615/1 புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வரும் வேடரவி என்பவர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். அவரிடம் இருந்து நிலத்தை மீட்டு நீர் தேக்க தொட்டி கட்ட அனுமதி வழங்கவும்,எங்க கிராமத்தில் உள்ள எங்கள் ஊர் அருகாமையில் தனிப்பட்ட நபர்கள் அனுபவித்து வரும் சர்வே எண் 641 ல் சுமார் 10 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை மீட்டு எங்கள் ஊரில் வசிக்கும் 700 குடும்பங்களுக்கு இலவச விட்டு மனை பட்டா வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .