தஞ்சாவூரான்சாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா
.தஞ்சாவூரான்சாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.;
அரியலூர் மார்ச்.28- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் தஞ்சாவூரான்சாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழா நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆண்டிமடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.. தலைமை ஆசிரியர் ராதா முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளி ஆசிரியர் அலெக்ஸ் மேரிசெலஸ்டின் வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் பேசும்போது பள்ளியில் பயிலக்கூடிய அனைத்து மாணவ, மாணவிகளும் இடைநிற்றல் இன்றி தினந்தோறும் வருகைபுரிய வேண்டும். புலம்பெயர்ந்து பணிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் கல்வி பயிலக்கூடிய தனது குழந்தைகளையும் அழைத்துச்சென்று விடுகிறீர்கள் அவ்வாறு அழைத்துச்செல்லும் போது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதோடு எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது. குழந்தைகளின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி கட்டாய கல்வி அவர்களின் உரிமை ஆகும். அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்தார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தின் போது பள்ளி மேம்பாட்டு திட்டம் தீர்மானம் நிறைவேற்றி அவற்றை செயலாக்க வடிவத்திற்கு கொண்டுவர வேண்டும். பள்ளி மேலாண்மை குழு முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு பள்ளி வயது குழந்தைகளை அரசு பள்ளியில் சேருங்கள் என தங்கள் ஊரில் உள்ள பெற்றோர்களிடம் அரசுப் பள்ளியில் பயணம் கூடிய குழந்தைகளுக்கு அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்கள் உயர்கல்விகள் முன்னுரிமை தமிழ் வரிகள் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு ஒதுக்கீடு போன்ற விவரங்களை கூறி அரசு பள்ளியில் ஆரம்ப வகுப்பிலேயே சேர்க்க அறிவுறுத்த வேண்டும் என கூறினார். பள்ளி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவது பள்ளி மேலாண்மை குழுவே. பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் நினைத்தால் உங்கள் ஊரில் உள்ள அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் உங்கள் ஊர் அரசு பள்ளி தஞ்சாவூரான்சாவடியில் சேர்க்கையை அதிகரித்து விடலாம் என கூறினார். ஓவிய போட்டி,திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் ளுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ராதா, உதவி ஆசிரியர் அலெக்ஸ் மேரிசெலஸ்டின், பள்ளி மேலாண்மை குழு தலைவர் காருண்யா ஆகியோர் மாணவ செல்வங்களுக்கு பரிசுகளை வழங்கினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. திரளாக வந்திருந்த மாணவர்களின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் கண்டு களித்தனர். நன்றியுரை பள்ளி மேலாண்மை குழு தலைவர் காருண்யா நன்றி கூறினார்.