சர்வதேச மகளிர் தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

குமாரபாளையத்தில் சர்வதேச மகளிர் தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.;

Update: 2025-03-28 13:44 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராஜா வீதியில் உள்ள நடராஜா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு சமுதாய நல பயிற்றுனர் மகாலட்சுமி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் எக்ஸெல் இயற்கை மருத்துவ யோகா மருத்துவமனை மருத்துவர் ராஜேஸ்வரி ஆரோக்கிய வாழ்வை குறித்தும் மருத்துவர் தீபிகா பெண்களுக்கு எளிய முறையில் யோகா பயிற்சி செய்வது குறித்து விளக்கி கூறினர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க இயக்குனர் செல்வராசு சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார் மாவட்ட இணை திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் மகளிர் குழுவிற்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் நிகழ்ச்சி நிறைவில் சமுதாய அமைப்பாளர் முரளிக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் நாமக்கல் திருச்செங்கோடு ராசிபுரம் உள்ளிட்ட பகுதி நகராட்சி மற்றும் பேரூராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பாளர் கௌசல்யா தொகுத்து வழங்கினார் ஒருங்கிணைப்பாளர் ரகு நன்றி உரை கூறினார்

Similar News