மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்;

Update: 2025-03-28 15:08 GMT
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டம், உதகை பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில், இத்தேர்வினை 58 மையங்களில் 3,497 மாணவர்கள், 3,320 மாணவியர்கள் என மொத்தம் 6,817 மாணவ / மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். தனிதேர்வுகள் 94 மாணவர்களும், 32 மாணவியர்களும் என மொத்தம் 126 நபர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வு பணியில் 58 முதன்மை கண்காணிப்பாளர்கள், 58 துறை அலுவலர்கள், 116 அலுவலக பணியாளர்கள், 439 அறை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள் 23 நபர்கள் என மொத்தம் 694 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் பொருட்டு பறக்கும் படை 108 நபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாணவர்களுக்குத் தேர்வு மையங்களில் போதிய வசதிகளும், போதுமான போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தரைத்தளத்திலேயே தேர்வறைகள் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், தேர்வு எழுதுகின்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கு தேர்வு எழுதி வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) திரு.நந்தகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Similar News