இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி
இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி;
தமிழ்நாடுஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி (Innovation Fellowship program) வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியானது கணினி பொறியியல் நிபுணத்துவம் (System Engineering expertise) புதுமைத் திறன்களை வழங்குதல், மேலும் மின்னணு வடிவமைப்பு (Eelectronics System Design) மற்றும் உற்பத்தி துறை (Manufacturing), தானியங்கி தொழில்துறை (Industrial Automation) இயந்திரவியல் (Robotics) மற்றும் சேர்க்கை உற்பத்தி (Additive Manufacturing) போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத் திறன்களை உள்ளடக்கிய பயிற்சி வழங்கி அதிநவீன தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் (Technology Startup) நிறுவனங்களில் நிபுணராக உருவாக்குவதற்கான பாதையை வழிவகுப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். தாட்கோ மூலம் கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற 28 இளைஞர்கள் Thermofisher Scientific, Ashok Leyland, G Care India, TCS போன்ற தனியார் முன்னனி நிறுவனங்களில் Machanical- R&D, Graduate Engineer Trainee மற்றும் R & D Business Development போன்ற பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் இப்பயிற்சியினை பெற 2022, 2023 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்று 21 முதல் 25 வயது வரையுள்ளவர்களாகவும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பயிற்சியினை பெற தகுதியுள்ளவர்கள் www.tahdco.comஎன்ற இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். பயிற்சிக்கான கால அளவு 18 வாரம் ஆகும். இப்பயிற்சியானது கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் (Technology Startups), மின்னனு உற்பத்தி நிறுவனம் (Electronic Manufacturing Company), Mobility and Automotive Company ஆகிய தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று மாதம் குறைந்தபட்சமாக ரூ.20,000/- ஊதியமாக பெறலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ ஏற்கும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.