கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா!
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.;
மண்டலங்களுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ள குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவர்கள் காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் வரும் 04.04.2025 முதல் 07.04.2025 வரை நடைபெறவுள்ள அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான தேசிய வலுதூக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.