ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு காப்பு தயாரிக்கும் பணிகள் தீவிரம்.....*
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு காப்பு தயாரிக்கும் பணிகள் தீவிரம்.....*;

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு காப்பு தயாரிக்கும் பணிகள் தீவிரம்..... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு காப்பு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் பங்குனி மாதம் அமாவாசை தினத்தன்று பூக்குழி எனப்படும் தீமிதி விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான பூக்குழி திருவிழா கடந்த வாரம் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பல்வேறு அலங்காரங்களில் ஸ்ரீ பெரிய மாரியம்மன் எழுந்துருளி நான்கு ரவிதிகள் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கொடியேறிய பத்து நாட்களும் பூக்குழி இறங்கக்கூடிய பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், அழகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை திருக்கோவிலுக்கு வந்து செலுத்தி வருகின்றனர். இதனால் அதிகாலை முதலிலே கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது. முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா 12 ஆம் தினமான நாளை பிற்பகலில் நடைபெற உள்ளது. பூக்குழி இறங்கும் பக்தர்கள் அதிகாலையில் திருக்கோவிலுக்கு வந்து காப்பு அணிவது வழக்கம் சுமார் 15,000 மேற்பட்ட பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்வதால் காப்பு தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. பத்து நாட்கள் விரதம் இருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் இந்த காப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.