தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*

தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*;

Update: 2025-03-28 17:54 GMT
தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*
  • whatsapp icon
விருதுநகரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக மாவட்ட கண்வீனர் சரஸ்வதி தலைமையில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூபாய் 7850 மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை தமிழக அரசு வழங்கிட வேண்டும், விலைவாசி உயர்வை ஈடு செய்ய அகவிலைப்படி வழங்கிட வேண்டும், பணிக்காலத்தில் அனுமதிக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பணி ஓய்வுக்கு பின்னரும் அனுமதித்திட வேண்டும் மருத்துவ படி வழங்கிட வேண்டும், ஈமச்சடங்கு தொகை வழங்கிட வேண்டும், பண்டிகை முன்பணம் வழங்கிட வேண்டும் பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்திக் கொடுத்திட வேண்டும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அனுமதித்திட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழக அரசுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Similar News