விருதுநகர் அருகே கோவிந்தநல்லூரில் செயல்படாமல் இருந்த பட்டாசு குழாய் தயாரிக்கும் ஆலையில் திடீரென தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கீரையின

விருதுநகர் அருகே கோவிந்தநல்லூரில் செயல்படாமல் இருந்த பட்டாசு குழாய் தயாரிக்கும் ஆலையில் திடீரென தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கீரையின;

Update: 2025-03-28 17:57 GMT
விருதுநகர் அருகே கோவிந்தநல்லூரில் செயல்படாமல் இருந்த பட்டாசு குழாய் தயாரிக்கும் ஆலையில் திடீரென தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கீரையின
  • whatsapp icon
விருதுநகர் அருகே கோவிந்தநல்லூரில் செயல்படாமல் இருந்த பட்டாசு குழாய் தயாரிக்கும் ஆலையில் திடீரென தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கீரையின விருதுநகர் அருகே உள்ள ‌ கோவிந்தநல்லூரில் அற்புத ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு குழாய் தயாரிக்கும் சிறிய ஆலை செயல்பட்டு வருகிறது இந்த ஆலை கடந்த மூன்று மாத காலமாக செயல்பாடின்றி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென இந்த ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் விருதுநகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் பட்டசு குழாய் தயாரிக்கப் பயன்படும் இயந்திரங்கள் எரிந்து சேதமாகின. இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து வச்சக்காரபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News