நரிக்குடி கிழக்கு ஒன்றியம் ஒட்டங்குளம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்*
நரிக்குடி கிழக்கு ஒன்றியம் ஒட்டங்குளம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்*;

நரிக்குடி கிழக்கு ஒன்றியம் ஒட்டங்குளம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டங்குளம் பகுதியில், முன்னாள் அமைச்சரும் விருதுநகர் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான பாஸ்கரன் தலைமையிலும், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் முன்னிலையிலும் பூத் கமிட்டி கழக நிர்வாகிகள் நியமனம் செய்தல் , இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கை மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக களஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் ஒட்டங்குளம் பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பூத் கமிட்டிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் குறித்து முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அதிமுக பூத் கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பணிகள் குறித்து கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் விளக்கமாக எடுத்துரைத்தார். இதனையடுத்து, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் பேசுகையில், வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்தும், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அஇஅதிமுக வை மாபெரும் வெற்றி பெற செய்வதற்கான ஆலோசனைகளை பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்த கள ஆய்வின் போது மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் சித்திக் மற்றும் அதிமுக கிளைக் கழக செயலாளர்கள், அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், நரிக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.