ஆரணி நகரமன்ற துணைத்தலைவரை கண்டித்து அதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் கோஷம்.

ஆரணி, ஆரணி நகரமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றதில் அதிமுக சேர்ந்த நகரமன்ற உறுப்பினர்கள் அதிமுக சேர்ந்த நகரமன்ற துணைத்தலைவரை கண்டித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது;

Update: 2025-03-28 18:05 GMT
ஆரணி நகரமன்ற துணைத்தலைவரை கண்டித்து அதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் கோஷம்.
  • whatsapp icon
ஆரணி நகரமன்ற துணைத்தலைவரை கண்டித்து அதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் கோஷம். ஆரணி, மார்ச் 28. ஆரணி நகரமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றதில் அதிமுக சேர்ந்த நகரமன்ற உறுப்பினர்கள் அதிமுக சேர்ந்த நகரமன்ற துணைத்தலைவரை கண்டித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமையில் நடைபெற்றது. நகரமன்ற துணைத்தலைவர் பாரி பி.பாபு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் இரண்டு பிரிவாக உள்ள அதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் நகரமன்ற துணைத்தலைவர் பாரி பி.பாபு ஆதரவாளர்களான சுதாகுமார், பானுப்ரியாபாரதிராஜா, வினாயகம், பாக்கியலஷ்மி வெங்கடேசன், நடராஜன், அமுதா ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். மற்றொரு பிரிவில் உள்ள அதிமுக கவுன்சிலர்கள் தேவராஜ், ஏ.ஜி.மோகன், ரம்யாகுமரன், சசிகலாசேகர், கிருபாசமுத்ரிசதீஷ், சிவக்குமார் ஆகியோர் நகராட்சி நிர்வாகம் வரவு, செலவு கணக்கு காண்பிக்காததால் நகராட்சியை கண்டித்து புறக்கணிப்பு செய்தனர். ஆனால் பாரி பி.பாபுவோ அவர்களின் ஆதரவான நகரமன்ற உறுப்பினர்களை வைத்து திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகின்றார் என்று புறக்கணிப்பு செய்த நகரமன்ற உறுப்பினர்கள் பாரி பி.பாபுவை கண்டித்து கோஷமிட்டனர். இது குறித்து பாரி பி.பாபுவிடம் கேட்டதற்கு ஒரு சில நகரமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்தது எனக்கு தெரியாது என்று கூறினார். பின்னர் நகரமன்ற கூட்டத்தில், ஆரணி நகராட்சிக்குட்பட்ட ஆற்காடு சாலை தரைப்பாலம் பகுதியில் ஆர்க்காடு முப்பது வெட்டி தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் குடிநீர் பிரதான குழாய் கமண்டல நாக நதியில் உடைப்பு சரி செய்யும் பணிக்கு ரூ. 1.9 லட்சம் குடிநீர் அவசர அவசியம் கருதி செய்யப்பட்டும், ஆரணி நகராட்சிக்குட்பட்ட ஆரணி தச்சூர் தலைமை நீரேற்று நிலையத்தில் குடிநீர் விநியோக பராமரிப்பு பணிகள் மதிப்பீடு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான பிவிசி பைப்புகள் புதியதாக மாற்றியமைத்தல் பணிக்காக ஒதுக்கப்பட்டம், மேலும் ஆரணி நகராட்சி 1 முதல் 33 வரை உள்ள பகுதிகளில் சிறு மின்னிசை பம்புகளுக்கு தேவையான புதிய மோட்டார்கள் 25 எண்ணிக்கை வாங்க 9 லட்சம், 1 முதல் 33 வரை உள்ள பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய்கள் பராமரித்தல் மற்றும் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள மின் மோட்டார்கள் உதிரி பாகங்கள் பழுது கொள்ளுதல் பணிக்கு 9.50 லட்சம், ஆரணி நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி, புதுக்காமூர் ரோடு நவீன எரிவாயு தகனமேடை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள மின்மோட்டார்கள் பெல்ட் மாற்றி அமைத்து பழுது நீக்கம் செய்து காயில் கட்டுதல் பணிக்கு ரூபாய் 60 ஆயிரம் ஒதுக்கியும், ஆரணி நகராட்சிக்குட்பட்ட குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டிடங்களில் கழிவறை இல்லாத மையங்களுக்கு தலா ஒன்றுக்கு 36ஆயிரம் என 10 மையங்களுக்கு 3லட்சத்து 60ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறை அமைக்கவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திமுக சேர்ந்த கவுன்சிலர் சுப்பிரமணியன், அரவிந்த், காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ஜெயவேலு ஆகியோர் அவர்களின் வார்டுகளுக்கு தேவையான வசதிகளை கேட்டனர். பின்னர் கூட்டம் முடிந்தது.

Similar News