கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம் அருகே ஆலங்கோட்டை பகுதி சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 40 வயது மனைவி அருகில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக பரமன்விளை என்ற பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் கட்டிட தொழிலாளியான கவின் (25) என்பவர் திடீரென அந்த பெண்ணை கட்டிப்பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, கவின் அந்தப் பெண்ணை மிரட்டி விட்டு ஓடிவிட்டார். இது குறித்து அந்தப் பெண் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கவினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.