
கேரள மாநிலம் வைக்கம் மகாதேவர் கோயில் விழாவையொட்டி சில ரயில்களுக்கு வைக்கம் ரோடு ரயில்நிலையத்தில் தற்காலிக நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் 16650 கன்னியாகுமரி – மங்களூரு சென்ட்ரல் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஏப்ரல் 11 முதல் 14 வரை காலை 9.48க்கு வந்து நின்று 9.49க்கு புறப்படும். இதனை போன்று ரயில் எண் 16649 மங்களூரு சென்ட்ரல்-கன்னியாகுமரி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 2.55க்கு வந்து நின்று 2.56க்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.