
தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியம் சார்பில் மயிலாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் மாநில நிர்வாகிகள் தில்லை செல்வம், பிரபா ஜி. ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.