
கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் போதைப்பொருட்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு எதிரான மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியியை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, கொடியசைத்து துவக்கி வைத்து பேசுகையில்- கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து நாள்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இது வரை சுமார் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களிடையே இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மாணவர்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள் என்பதை உணர முடிகிறது. என பேசினார். இப்பேரணியில் நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தெ.தி.இந்து கல்லூரி, நாகர்கோவில் மகளிர் கிறித்துவக் கல்லூரி, மற்றும் ஸ்டெல்லாமேரிஸ் பொறியியல் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி வடசேரி அண்ணா விளையாட்டரங்கம் வரை சென்று முடிவுற்றது.