மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

மேலகிருஷ்ணன் புதூர்;

Update: 2025-03-29 08:48 GMT
குமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலகிருஷ்ணன்புதூர்  சந்திப்பில்  வைத்து மத்திய அரசை கண்டித்து  இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.    ஒன்றிய கழக செயலாளர் ஆ.லிவிங்ஸ்டன் தலைமை வகித்தார். இதில் ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக அணிகளின் அமைப்பாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், கழக தொண்டர்கள்,100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சம்பளம் கிடைக்காத ஏழை மக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News