அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேச்சு*
அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற அமைச்சர் கே எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்;

விருதுநகர் 100 வேலை திட்டத்திற்கு பணத்தை ஒதுக்க கோரி முதலமைச்சர் கடிதம் எழுதினாலும் பணத்தை தர மோடி அரசு மறுக்கிறது; இங்கு ஒலிக்கும் முழக்கங்கள் மோடி காதில் விழுக வேண்டும் - அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேச்சு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு பணம் வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமை வகித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு 100 நாள் வேலை திட்டத்திற்கு உடனடியாக பணத்தை ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூ நான்கு ஆயிரம் கோடியை மத்திய அரசு தர மறுக்கிறது முதலமைச்சர் கடிதம் எழுதினாலும் பணத்தை தர மோடி அரசு மறுக்கிறது. மோடி வீட்டு பணத்தை கொடுக்கவில்லை நம் வரியைத்தான் கொடுக்கிறார்கள். அதற்காகத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் சகோதரராக இருந்து மத்திய அரசிடம் போராடி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு போய் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடக்கிறது. இங்கு போராட்டம் நடத்துவது டெல்லி வரை செல்லும். அனைவரும் ஒன்றிணைந்து பணத்தை வாங்க வேண்டும். பணம் வந்தால் தான் கூடுதல் வேலை நாட்கள் வழங்க முடியும். இதை ஒழுங்குப்படுத்தி மத்திய அரசை கண்டித்து தான் இந்த போராட்டம் நடக்கிறது. இங்கு முழக்கங்கள் எழுப்புவது மோடி காதில் விழுக வேண்டும். முதலமைச்சர் எப்போதும் உங்களை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் எப்போதும் மகளிருக்கு தான் அதிக திட்டங்களை கொண்டு வருகிறார். பெண்களிடம் பணம் இருந்தால் தான் அது வீட்டிற்கு செல்லும். மகளிர் உரிமைத்தொகை தகுதி உள்ள அனைவருக்கும் வழங்கப்படும் அதற்காக மீண்டும் மனுக்கள் வாங்கப்பட உள்ளது என பேசினார்.