நூறுநாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் 

திமுக கண்டன ஆர்ப்பாட்டம் ;

Update: 2025-03-29 13:15 GMT
  • whatsapp icon
நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய ரூபாய் 4,034 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். தமிழகத்தை தொடர்ந்து ஒன்றிய அரசு வஞ்சித்து வருவதைக் கண்டித்தும் பேராவூரணி தெற்கு ஒன்றியம் ஒட்டங்காடு, சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியம் பூக்கொல்லையிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  இரு இடங்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி எம்எல்ஏவுமான நா.அசோக்குமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், மு.கி.முத்துமாணிக்கம், திமுக தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள்,  மற்றும் பொதுமக்கள், நூறு வேலைத்திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல ரெட்டவயல் கடைவீதியில் சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News