உதகை தெற்கு ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆ.இராசா எம்.பி., சிறப்புரை;
100 நாள் வேலை திட்டதிற்கு நிதி ஒதுக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க., அரசை கண்டித்து, தலைமை கழக அறிவிப்பின்படி கண்டன ஆர்ப்பாட்டம் உதகை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நுந்தாளா மட்டம் பகுதியில் நடைபெற்றது, ஒன்றிய செயலாளர் பரமசிவன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு கழக துணை பொதுச்செயலாளர் - நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்கள், தேர்தல் பணி செயலாளர் அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட - ஒன்றிய - பேரூர் கழக நிர்வாகிகள், பெற்றோ அணிகளின் நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.