திருக்கழுக்குன்றம் பகுதியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருக்கழுக்குன்றம் பகுதியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;

செங்கல்பட்டு மாவட்டம்,களத்தூரில் V.விஸ்வநாதன் தலைமையில் 100 நாள் வேலை உறுதி திட்ட சம்பள தொகை 4034 கோடி ரூபாயை விடுவிக்காத பா.ஜ.க.அரசை கண்டித்து, திருக்கழுக்குன்றம் ஒன்றிய பெருந்தலைவர் மருத்துவர் R.T.அரசு முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..இந்த கண்டன ஆர்பாட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் M.செல்வக்குமார் மாவட்ட கவுன்சிலர் R.K.ரமேஷ் விசிக ஒன்றிய செயலாளர் பூ.சதீஷ்,பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆர்பாட்டத்தில் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய பா.ஜ.க அரசிற்கு எதிராக கோஷமிட்டனர்.