
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் 180 பேருக்கு கண், இதய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் தஞ்சாவூா் மற்றும் கும்பகோணம் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை தொடங்கி தொடா்ந்து 2 நாள்கள் நடைபெற்றது. இதில், இ.சி.ஜி., எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதன் மூலம் ஏறத்தாழ 2 ஆயிரம் போ் பயனடைந்தனா். மருத்துவக் குழுவினா் மேற்கொண்ட பரிசோதனையில் 131 பேருக்கு கண் அறுவை சிகிச்சையும், 49 பேருக்கு இதய அறுவை சிகிச்சையும், ஏறத்தாழ 500 பேருக்கு கண் கண்ணாடியும் தேவைப்படுவது தெரிய வந்தது. பலருக்கு மருந்துகள் எடுத்துக் கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டு, தேவையானோருக்கு அடிப்படை மருந்துகள் அளிக்கப்பட்டன. சென்னை ஸ்ரீராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அறுவை சிகிச்சைகளும், கண் கண்ணாடிகளும் இலவசமாக வழங்க சாஸ்த்ரா ஏற்பாடு செய்துள்ளது. கண்புரை அறுவை சிகிச்சையை தஞ்சை மற்றும் சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மேற்கொள்ள சாஸ்த்ரா நடவடிக்கை எடுத்து வருகிறது.