இ-பாஸ் நடைமுறை குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல்
கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை குறித்து - மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்;

கோடைக்காலம் துவங்கப்பட உள்ளதால் கொடைக்கானல் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகளின் வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு 01.04.2025 முதல் 30.06.2025 வரை வாரநாட்களில் 4000 வாகனங்களும் வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கும் கொடைக்கானலுக்கு அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, கொடைக்கானலுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ‘epass.tnega.org” என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ.பாஸ் பெற்று பயணிக்குமாறும் மேலும் e.PASS பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு Local e.PASS பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு தொலைபேசி எண் : 1800-425-0150 தொடர்பு கொள்ள தெரிவிக்கப்படுகிறது. அரசு பேருந்துகள், உள்ளூர் வாகனங்கள், விவசாயப் பொருட்கள் மற்றும் சரக்குப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற விலக்களிக்கப்படுகிறது. ஏற்கனவே அனுமதி பெறாத உள்ளுர் வாகனங்கள் புதியதாக உள்ளுர் e.PASS பெற கொடைக்கானல் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.