ஆரணி பகுதியில் திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

ஆரணி அடுத்த சேவூர், முள்ளிப்பட்டு, எஸ்.வி.நகரம், அப்பந்தாங்கல், தேவிகாபுரம், நடுக்குப்பம், வண்ணாங்குளம், சித்தேரி ஆகிய இடங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு நிதி தராமல் ஏமாற்றி வருவதை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2025-03-29 17:23 GMT
  • whatsapp icon
ஆரணி, ஆரணி அடுத்த சேவூர், முள்ளிப்பட்டு, எஸ்.வி.நகரம், அப்பந்தாங்கல், தேவிகாபுரம், நடுக்குப்பம், வண்ணாங்குளம், சித்தேரி ஆகிய இடங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு நிதி தராமல் ஏமாற்றி வருவதை கண்டித்து திமுக சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆரணி அடுத்த சேவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டு தலைமை தாங்கி 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி 4034கோடி ரூபாயை தமிழகத்திற்கு உடனே தரவேண்டி பேசினார். இதில் தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன் அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும் இதில் முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவர் ஷர்மிளா தரணி, நிர்வாகிகள் சுகுமார், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுகுமார், காசி, ஏ.எம்.ரஞ்சித், சிறுபான்மை அணி மாவட்டநிர்வாகி அப்சல், மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முள்ளிப்பட்டு கிராமத்தில் மாவட்டதுணைசெயலாளர் ஜெயராணிரவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிராம பெண்கள் கலந்துகொண்டனர். இதில் முன்னாள் ஒன்றியகவுன்சிலர் முள்ளிப்பட்டு ரவி அனைவரையும் வரவேற்று பேசினார். எஸ்.வி.நகரம் கிராமத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் தலைமையிலும், அப்பந்தாங்கல் கிராமத்தில் ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமையிலும், தேவிகாபுரத்தில் ஒன்றியசெயலாளர் துரைமாமது தலைமையிலும், நடுக்குப்பம் கிராமத்தில் ஒன்றியசெயலாளர் எஸ்.மோகன் தலைமையிலும், வண்ணாங்குளம் கிராமத்தில் பொதுக்குழு உறுப்பினர் வெள்ளைகணேசன், கண்ணமங்கலம் பேரூர் செயலாளர் கே.கோவர்த்தனன் ஆகியோர் தலைமையிலும், சித்தேரி கிராமத்தில் ஒன்றியசெயலாளர் எம்.சுந்தர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News