மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராம சபைக் கூட்டம்

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வில்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-03-29 19:25 GMT
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராம சபைக் கூட்டம்
  • whatsapp icon
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வில்பட்டி ஊராட்சி, பள்ளங்கி காந்திஜி ஆரம்பப்பள்ளியில் கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, கலைஞர் கனவு இல்லம் 2025-2026 பயனாளிகள் பட்டியல் ஒப்புதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கிராமசபைக் கூட்டத்தில், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திருநாவுக்கரசு, உதவி இயக்குநர்(ஊராட்சி-பொ) கருப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பிரபாராஜமாணிக்கம், கொடைக்கானல் வட்டாட்சியர் பாபு மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Similar News