வடமதுரை மரக்கழிவு குப்பைகளில் பற்றிய தீ..
திண்டுக்கல் வடமதுரை மரக்கழிவு குப்பைகளில் பற்றிய தீ..;

திண்டுக்கல் வடமதுரையில் மரக்கடைகளில் இருந்து கொட்டப்படும் மரக்கழிவுகள் புறவழிச் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கொட்டப்பட்ட மரக்கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றததால் தற்போது அதிகமான வெயிலின் தாக்கத்தால் தானாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுகளுக்கு மேலே மின்சார கேபிள்கள் செல்வது குறிப்பிடத்தக்கது. மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்க உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.