புதிய வகுப்பறை கட்டுவதற்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு!
புதிய வகுப்பறை மற்றும் கழிவறை அமைக்க அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.;

வேலூர் மாநகராட்சி மண்டலம் இரண்டுக்கு உட்பட்ட 19 வது வார்டில் நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை மற்றும் கழிவறை அமைக்க இன்று இரண்டாம் மண்டல தலைவர் வீனஸ் ஆர்.நரேந்திரன் மற்றும் உதவி ஆணையாளர் சதீஷ்குமார், பொறியாளர் ஜெயக்குமார், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது மாமன்ற உறுப்பினர் மாலதி சேகர், கழகப் பிரதிநிதி கணேஷ் மற்றும் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.