குப்பூர் அரசுப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் .
குப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் சீர்வரிசை வழங்கிய பொதுமக்கள் .;
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட குப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நேற்று மாலை விமரிசியாக கொண்டாடப்பட்டது .விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்துராஜ் தலைமையேற்று நடத்தினார். சிறப்பு விருந்தினராக தர்மபுரி வட்டார கல்வி அலுவலர் N. A. B. நாசர் அவர்கள், வட்டார வள ஆசிரியர் பயிற்றுனர் அருண்குமார்,, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாது, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் K சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர் திரு சங்கர், முன்னாள். VLC தலைவர் மாதையன், மற்றும் மு.கிராம நிர்வாக உதவியாளர் முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். 2024 25 ஆம் ஆண்டில் முதல் மதிப்பெண், 100% வரி பதிவேடு மற்றும் கலைத் திருவிழாவில் மாவட்ட,மாநில அளவில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் தன்னார்வலர்கள், பெற்றோர்கள், பொது மக்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் விழா குழுவினர்களான S.வெற்றிவேல். செல்வராஜ். காளியப்பன். சத்யராஜ். செந்தில் சிங்காரம் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு சீர்வரிசை ஊர்வலமாக கொண்டு வந்து தங்கள் குழந்தைகள் பள்ளி படிக்கும் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கினார்கள் இந்தப் பள்ளியில் 2026 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை இன்று 6 குழந்தைகள் சேர்க்கப்பட்டது இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த வேண்டும் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளும் வசதிகளும் உள்ளது கம்ப்யூட்டர் வகுப்பறை ஸ்மார்ட் போர்டு வகுப்பறை பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆர்.ஓ குடிநீர் கழிப்பறைகள் போன்ற அனைத்து வகையான வசதிகளும் அரசு பள்ளியில் உள்ளது தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று ஊர் பொதுமக்களுக்கு தலைமையாசிரியர் வேண்டுகோள் வைத்தார்.