மத்திய அரசை கண்டித்து திமுக பொதுக்கூட்டம்.
மதுரை சுப்ரமணியபுரம் பகுதியில் நேற்று திமுகவின் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.;

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் கழக இளைஞர் அணி சார்பில், இந்தித் திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம், மக்களவை தொகுதிகள் சீரமைப்பில் அநீதி இழைத்திடும் ஒன்றிய அரசை கண்டித்து, மதுரை சுப்பிரமணியபுரம் (மேயர் முத்து பாலம்) அருகில் நேற்று ( மார்ச்.29) இரவு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் கோவி.லெனின் அவர்களுடன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.