காவிரி ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
ஏரியூர் அருகே காவிரி ஆற்றில் மீன் பிடிக்கும் போது ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு;
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் அடுத்த ஊத்துபள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் இவரும் இவரது மனைவி லட்சுமியும் தினசரி காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரிசலில் சென்று மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நேற்றும் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்ற போது பரிசலில் வலையை இழுக்கும் போது லட்சுமி தடுமாறி காவிரியாற்றில் விழுந்துள்ளார் இதனை அடுத்து அவரது கணவர் தங்கராஜ் உடனே ஆற்றில் குதித்து லட்சுமியை தேடினார். ஆனால் லட்சுமி கிடைக்கவில்லை சிறிது நேரத்தில் லட்சுமி சடலமாக மீட்கப்பட்டார் இது குறித்த தகவல் அறிந்த ஏரியூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து லட்சுமி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.