இலஞ்சி பாரத் பள்ளியில் ரமலான் பண்டிகை
இலஞ்சி பாரத் பள்ளியில் ரமலான் பண்டிகை;

தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்வி ஆலோசகா் உஷா ரமேஷ் தலைமை வகித்தாா். முதல்வா் பாலசுந்தா் முன்னிலை வகித்தாா். மழலையா் பிரிவு மாணவா்கள் அப்துல் ரிஸான், நூருல்லா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். ரமலான் நோன்பு, பண்டிகை குறித்து மாணவி மிருதுளா ஜனனி பேசினாா். 6ஆம் வகுப்பு மாணவா்- மாணவியரின் மௌன நாடகம் நடைபெற்றது. விழாவில் மழலையா் பிரிவு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவா்-மாணவியா் இஸ்லாமிய பாரம்பரிய ஆடைகள் அணிந்து பங்கேற்றனா். ராகுல் வரவேற்றாா். ஜீவா நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை பிரதிக்ஷா, சுபிக்ஷா ஆகியோா் தொகுத்து வழங்கினா். ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் ராதாபிரியா, துணை முதல்வா் செல்வலிங்கம் ஆகியோா் செய்திருந்தனா்.