பொது இடத்தில் ரகளை செய்தவர் கைது

கொல்லங்கோடு;

Update: 2025-03-30 02:41 GMT
கொல்லங்கோடு போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கண்ணனாகம் சந்திப்பில் குடிபோதையில் ஒருவர் சாலையோரம் நின்று அந்த பகுதி வழியாக வரும் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் ரகளையில் ஈடுபட்டது நீரோடி பகுதியை சேர்ந்த ஏசு பாலன் (51) என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஏசுபாலன் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Similar News