குளச்சல் அருகே உடையார் விளை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சீயோன் தேவகுமாரி (36). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த சுகிர்தா ராணி என்பவரை அதே பகுதியை சேர்ந்த ததேயுதாஸ் என்ற பாபு (56)என்பவர் தாக்கியதாக தெரிகிறது. இதனை அறிந்த சீயான் தேவகுமாரி தட்டி கேட்டார். இதன் காரணமாக அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவ தினம் தேவகுமாரியின் வீட்டில் அத்துமீறி நுழைந்த பாபு அவருடைய ஆடையை பிடித்து இழுத்து மானபங்கப் படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது சீயோன் தேவகுமாரி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் பாபு அங்கிருந்த வெட்டு கத்தியை காட்டி கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு சென்றுள்ளார். இது குறித்து சீயோன் தேவகுமாரி குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை மானபங்கம் படுத்த முயன்ற பாபு மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.