சேலத்தில் தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு
2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்;

சேலம் கிச்சிப்பாளையம் அந்தேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 40), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பாத்திமா நகரில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து சக்தி கிச்சிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் சக்தியிடம் கத்திமுனையில் பணம் பறித்தது கிச்சிப்பாளையம் சுண்ணாம்பு சூளை பகுதியை சேர்ந்த விக்ரம் (22), கார்த்திக் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.