கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும் அமைச்சருமான சுரேஷ்ராஜனுக்கு விரைவில் அமைச்சர் அந்தஸ்து கொண்ட வாரிய பதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக நிதித்துறை அமைச்சரும் குமரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு கலந்து கொண்ட நிகழ்ச்சி நேற்று மாலை நாகர்கோவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சுரேஷ் ராஜன் கலந்து கொண்டார். சுரேஷ் ராஜன் கலந்து கொண்ட விழாவில் அவரது ஆதரவாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது. அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சுரேஷ்ராஜனை சுற்றி இருக்கும் அவரது ஆதரவாளர்கள் நேற்று நடந்த நிகழ்ச்சிகளும் அவரை சுற்றிலும் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டது திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவருக்கு திமுக தலைமை முக்கிய பொறுப்பு வழங்கும் பட்சத்தில் குமரி மாவட்டத்தில் மீண்டும் திமுக எழுச்சி பெரும் என கட்சியினரே பேசத் தொடங்கியுள்ளனர். எது எப்படியோ குமரி மாவட்டத்தில் மாற்றுக் கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுத்து கழக உடன்பிறப்புகளை புறக்கணித்து வந்த நிலையில் சரிவின் பாதையில் சென்று கொண்டிருந்த கட்சிக்கு இவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பால் புது எழுச்சி காண இருப்பதாக மூத்த நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.