கன்னியாகுமரி மாவட்டம் தோவாளைதாலுகாவின் தலைநகரமான. பூதப்பாண்டியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பூதலிங்கேஸ்வரர் சிவகாமி அம்மாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பண்டைய பாண்டிய மன்னர் காலத்தில் பாறைகளை குடைந்து கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த குகை வரை குடை கோயில் என்பதாலும், சூரியனார் பரிகார தல கோயில் என்பதாலும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆன்மீக தலங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் இக்கோயிலில் உள்ள தேர் தென் தமிழகப் பகுதியில் மிகவும் அதிக எடை மற்றும் அதிக பாரம் கொண்ட தேர் எனவும் கோயில் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்திருவிழாவை காண தோவாளை, அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதி மக்கள் அதிக அளவில் கடந்த காலங்களில் கலந்து வருகின்றனர். தற்போது தேர் திருவிழா நடைபெற்று 50 நாட்கள் தாண்டிய நிலையில் தேர் இரும்பு தகடுகளால் கொட்டகை அமைத்து மூடும் பணிக்கு போதிய நிதி ஒதுக்காததால் இப்பணி நடைபெறாமல் இருந்து வருகிறது என கூறப்படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த தேர் என்பதாலும் புராதன ஓவியங்கள், கலை சிற்பங்கள் கொண்டதாலும் தற்போதைய தொடர் அதிக வெப்ப சலனம் மற்றும் தொடர் சாரல் மழையில் சேதம் அடைய வாய்ப்புள்ளது. இப்பிரச்சனை காரணமாக பூதப்பாண்டி பூதலிங்கேஸ்வரர் பக்தர்கள் சங்கம் சார்பில் இந்து அறநிலைய துறை சுசிந்திரம் அலுவலகத்தில் பல மனுக்கள் கொடுத்த பின்னரும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் மக்கள்போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பக்தர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இந்து இயக்கங்கள் இந்து சமய அறநிலையத்துறைமேற்படி தேரினை இரும்பு தகடு கொண்டு கொட்டகை அமைத்து மூடுவதற்கு போதிய நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் எனவும் கூறி வருகிறார்கள்