கலவை:தனியார் பள்ளி வாகனம் மின் கம்பம் மீது மோதி விபத்து
தனியார் பள்ளி வாகனம் மின் கம்பம் மீது மோதி விபத்து;

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே ஸ்ரீ ஜெயம் நாமக்கல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று மாலை பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு அனந்தலை நோக்கி பஸ் செல்லும் போது வாலாஜா பூக்கார தெருவில் வேகத்தடையில் நிலைத்தடுமாறி அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி பஸ் நின்றது. அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு மாணவருக்கும் காயம் ஏற்படவில்லை. விரைந்து வந்த மின்சார ஊழியர்கள் துருத்தமாக செயல்பட்டு பள்ளி வாகனத்தை மீட்டனர்.