அவலூர்பேட்டை அருகே மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை;

Update: 2025-03-30 06:07 GMT
அவலுார்பேட்டை அடுத்த மேல்செவலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம், 75; இவர் கடந்த 24ம் தேதி காலை வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மகன் தாமோதரன், 55; அளித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் நந்திபுரம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News